கடந்த 2009ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிக் குழு படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் சுசீந்திரன். இதனையடுத்து நான் மஹான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
![suseenthiran](http://image.nakkheeran.in/cdn/farfuture/4LcSRzD7wUxBy9Hjg7BYjuJ6GWfGwWkd-UX79m6nDBo/1566652046/sites/default/files/inline-images/suseenthiran.jpg)
தமிழ் சினிமாவில் இவர் நுழைந்தபோது வருடத்திற்கு ஒரு படம் என்று பொறுமையாக கவனம் செலுத்தி எடுத்தவர் இந்த வருடத்தில் மட்டும் ஒருசேர நான்கு படங்களில் பணிபுரிந்து வருகிறார். இதில் வெண்ணிலா கபடிக்குழு இவருடைய எழுத்திலும், கெண்ணடி கிளப் என்றொரு படம் இவருடைய இயக்கத்திலும் வெளியாகியுள்ளது. கெண்ணடி கிளப் பெண்கள் கபடிக்குழுவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஷாலை வைத்து இவர் இயக்கிய படம் பெரும் வெற்றிபெற்றது. அப்போது அது அஜித் நடிப்பில் ஆரம்பம் படத்துடன் வெளியாகியிருந்தது. இருந்தாலும் அஜித் படத்திற்கு இணையாக ஓடியது பாண்டிய நாடு. இப்படத்தில் விஷால் ரௌடிகளை துவம்சம் செய்யும் மாஸ் ஹீரோவாக இல்லாமல், இன்னோசண்ட்டான சாதாரன மனிதரை போல நடித்திருப்பார். விஷாலுடைய கதாபாத்திரத்திற்கு இணையாக அவருடைய நண்பனாக நடித்திருக்கும் விக்ராந்தின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்ததை பலரும் பாராட்டினார்கள். இது விக்ராந்திற்கு கம்பேக் என்றும் பலரும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் கெண்ணடி கிளப் புரோமோஷனில் இயக்குனர் சுசீந்திரன், “இந்த படத்தில் முதன் முதலாக விஷால் கதாபாத்திரத்திற்கு சிவகார்த்திகேயனையும், விக்ராந்த் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியையும் நினைவில் வைத்துதான் முதலில் எழுதினேன். அதனை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் மாற, அனைத்துமே மாறியது. விஷால் இப்படத்தின் கதையை கேட்டார். பின் அவருக்கு இப்படத்தின் கதை பிடித்துவிட்டதால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுத்தோம்” என்றார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் நடித்திருந்தால் ஒருவேளை அஜித்தும் விஜய்யும் தொடக்கத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்த ராஜாவின் பார்வையில் படம் போல இருந்திருக்கும். இது அவர்களுடைய ரசிகர்களுக்கும் பெரிய லாஸ்தான்.