நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
![vijay sethupathi](http://image.nakkheeran.in/cdn/farfuture/97o9c-7me30a63w1DgT998MA6eC1TjtP6RvErzq_a6U/1560763794/sites/default/files/inline-images/vijay-sethupathi_10.jpg)
திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதனையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் படம் வருகிற ஜூன் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் ஜெயராம் உடன் மார்கோனி மாத்தாய் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி இந்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். தற்போது உப்பென்னா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.இதில் ஹீரோயினாக நடிக்கும் கிரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.
கிரித்தி அழகர் சாமியின் குதிரை, பாண்டிய நாடு என சில தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.