Published on 20/10/2018 | Edited on 20/10/2018
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவான 'தேவி' படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தமன்னா சிறப்பாக நடித்து நல்ல பெயர் எடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது இதே கூட்டணியில் 'தேவி' படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. மொரிஷியசில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் தமன்னா தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து சென்னை திரும்பிய தமன்னாவை விஜய், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழு வாழ்த்தி அனுப்பியுள்ளனர். மேலும் 'இந்த படத்திலும் தமன்னா சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரியரில் இது முக்கியமான படம்' என ஏ.எல்.விஜய் வாழ்த்தியுள்ளார்.