Skip to main content

'சமூக இடைவெளி என்பது மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது' - விஜய் மில்டன் 

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போய் உள்ள நிலையில் இந்தியாவில் இதன் காரணமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு தற்போது அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் விஜய் மில்டன் சமூக விலகல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

bbkb

 

 

''சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்ப பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம் ஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..பிடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம் போட்டுக்கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம். சகமனிதர்களை ஏன் நண்பர்களைக் கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அச்சமாக இருக்கிறது. இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச் செல்வதுதான் social responsibility என அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்