
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் அப்டேட் குறித்து பேசியுள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவகியுள்ள ஜெ.பேபி பட செய்தியாளர்களை சந்திப்பில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு மேடையில் படக்குழுவை வாழ்த்தினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பரபரப்பாக ஷூட் போய்ட்டிருக்கு. கரெக்டான நேரத்தில் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதனால் கொஞ்சம் பொறுமையா இருங்க. கரெக்டான நேரத்தில் அப்டேட் வரும். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி போய்கிட்டிருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும். இது ரீமேக் படமல்ல. புது ஐடியா. இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு.
அஜித், விஜய் இருவருமே இயக்குநர்களின் நடிகர்கள் தான். இருவரிடமும் வேலை பார்க்க ஈஸியாக இருந்தது. முதலில் பயங்கர பயமா இருக்கும். ஆனால் இருவருமே ஷூட்டிங் ஆர்ட்டிஸ்டுகளை ரொம்ப கூல் ஆக்கிடுவாங்க. ஒரு ரசிகரா விஜய் இன்னும் படம் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதை அவரிடமே சொல்லியிருக்கேன். லாஸ் ஏஞ்சல்ஸில் நிறைய சிஜி வேலை இருக்கு. இங்கேயும் 5,6 கம்பெனிகளிடம் வேலை போய்ட்டு இருக்கு. தொழில்நுட்ப ரீதியா ரொம்ப ஸ்ட்ராங்கான படம். பண்டிகை நாட்களில் படம் வெளியாகலாம்” என்றார்.