Published on 24/03/2018 | Edited on 26/03/2018

சன் பிக்சர்ஸ் தயரிப்பில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் விஜய்62 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்டைக்கிற்கு மத்தியில் பரபரப்பாக படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பிற்கு திரையுலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது குறித்த விளக்கம் பட அதிபர்கள் சங்கம் தரப்பில் கடந்த 20ஆம் தேதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இதையறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆரவாரம் செய்தார்கள். விஜய் வெளியே வருவாரா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் வரமாட்டார் என்று பலரும் கூறி வந்த நிலையில் விஜய் திடீரென்று வெளியே வந்து கூடி இருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து குஷிபடுத்தினார்.