Skip to main content

விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் செய்த அதிரடி...

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாள் இன்று, இதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #HBDEminentVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது மிக வைரலாகி ட்விட்டர் உலக ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. 
 

thalapathy bus

 

 

இதனையடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயரையும் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். அறிவித்ததைபோல் ஆறு மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த போஸ்டரில் வயதான விஜய் மற்றும் கால்பந்தாட்ட வீரர் போன்ற இளம் விஜய் என்று இரு தோற்றங்களில் இருக்கிறார் விஜய். முன்பே தகவல் வெளியானது போல இப்படத்திற்கு  ‘பிகில்’ என்றே பெயரிட்டுள்ளனர்.
 

இந்நிலையில் பல திரை பிரபலங்கள் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடைய ரசிகர்களும் பல நலத்திட்ட உதவிகளை செய்து விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் சேர்ந்து தனியார் பேருந்து ஒன்றில் இன்று நாள் முழுவதுமாக பயணிகள் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பேருந்தில் விஜய் ஸ்டிக்கர்கள் முழுவதுமாக ஒட்டப்பட்டுள்ளது. இந்த இலவச வசதியுடைய பேருந்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் தொடங்கி வைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்