விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர்.
இப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்பு கட்சியின் பெயரை அறிவித்த போது தெரிவித்திருந்தார். அவர் நடத்தி வரும் த.வெ.க. கட்சியின் கொடி அறிமுகம் சமீபத்தில் நடந்தது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் என தெரிவித்திருந்தார். அதன்படி கட்சியின் முதல் மாநாடு இம்மாதம் விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்த நிலையில் கோட் படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். படத்தின் முன்பதிவு டிக்கெட் ஆரம்பித்து அனைத்து காட்சிகளும் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு வாய்மொழியாக விஜய் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோட் படம் திரைக்கு வரும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்றும் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் ரசிகர்களும் தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக ‘தி கோட்’ பட வெளியீட்டின் போது, புரொமோஷன் பணிகளுக்காக உருவாக்கப்படும் பேனர்களில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது எனக் கட்சி நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில் கடந்த வருடம் பொங்கலின் போது வாரிசு படம் வெளியானது. அதே நாளில் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இரு ரசிகர்களும் முதல் நாள் சிறப்பு காட்சியின் போது மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது லாரி மேல் ஏறி நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.