Skip to main content

'விஜய் 69' ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் ஏமாற்றம்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

vijay 69 viral poster fans dissappointed

 

பாலிவுட்டில் மூத்த நடிகராக வலம் வருபவர் அனுபம் கெர். கிட்டத்தட்ட 70 வயதை நெருங்கவுள்ள இவர் இந்தியை தாண்டி தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் 'வி.ஐ.பி' , 'லிட்டில் ஜான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான 'கனெக்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

இந்த நிலையில் அனுபம் கெர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை அக்‌ஷய் ராய் இயக்குகிறார். 'யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கதை 69 வயதுடைய ஒருவர் டிரையத்லான் போட்டியில் பங்கேற்க முடிவு செய்கிறார். அவரைப் பற்றியும் அவர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாரா என்பதை விரிவாகச் சொல்லும் விதமாகவும் இருக்கும் என போஸ்டரை பார்க்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் இப்படத்திற்கு 'விஜய் 69' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

 

'விஜய் 69' என்ற தலைப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. டைட்டிலை பார்த்த பலரும் நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அப்டேட் என நினைத்து ஏமாந்துவிட்டனர். விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவருக்கு 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்