Skip to main content

'தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கிறேன்' - வெங்கட் பிரபு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published on 21/03/2019 | Edited on 21/03/2019
venkat

 

பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர்' படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். இதில் நாயகனாக வைபவ் நடிக்க, நாயகியாக சென்னை 600028 2ஆம் பாக நாயகி சானா அல்தாப் நடித்துள்ளார். மேலும் சம்பத், இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்திருக்கிறார். மேலும் தேர்தல் (ரிலீஸ்) தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிங்கிள் டேக்கில் நடித்த சிம்பு... இணையத்தில் ட்ரெண்டாகும் 'மாநாடு' மேக்கிங் வீடியோ!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

maanaadu movie single shot video released

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் மேக்கிங் வீடியோவை ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சியில் நடிகர் சிம்பு 5 நிமிடம் தொடர்ச்சியாக ஒரே டேக்கில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

‘மாநாடு’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் 'மாநாடு'!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Silambarasan starring maanaadu movie release on ottstarring maanaadu movie release on ott

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில், சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் பிரபல ஓடிடி தளமான சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது. விரைவில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.