Skip to main content

"சிம்புவே படத்தை பார்த்துட்டு படம் புரியுதுப்பான்னு சொல்லிட்டாரு" - இயக்குனர் வெங்கட் பிரபு

Published on 22/06/2021 | Edited on 22/06/2021
gsgsdbs

 

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து மாநாடு படத்தில் இடம்பெற்றுள்ள 'மெஹெரசைலா' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப்பாடல் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்துகொண்டனர். அதில்...

 

"சின்னப்பசங்களை வைத்து படம் இயக்கிய சமயத்தில் யுவன் தான் என் படங்களின் ஹீரோவாக இருந்தார். யுவன் என் படங்களுக்குத்தான் பெஸ்ட்டான பாடல்களை தருவார் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அவருக்கு செல்வா (செல்வராகவன்) தான் ஃபர்ஸ்ட். அந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் பொறாமை கூட உண்டு. எப்படி இளையராஜா-வைரமுத்து கூட்டணி மிகப்பெரிய புகழ்பெற்றதோ, அதேபோல அவர்களது வாரிசுகளான யுவனையும் மதன் கார்க்கியையும் எனது படத்தின் மூலமாகத்தான் ஒன்று சேர்க்கவேண்டும் என நினைத்து ‘பிரியாணி’ படம் மூலம் அதை சாதித்தேன். இதோ இந்தப்படத்திலும் இந்த ’மெர்ஸைலா’ பாடலில் அவர்கள் இணைந்திருப்பதில் சந்தோசம் தான்.. மதன் கார்க்கியின் வார்த்தைகளில் அவரது தந்தை வைரமுத்துவின் சாயலை விட கவிஞர் வாலியின் சாயல் தான் எனக்கு தெரிகிறது. ரஜினி சார் நடித்த நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்கிற கல்யாண வீட்டு பாடலை போல கலகலப்பாக இருக்க வேண்டும் என மதன் கார்க்கியிடம் கேட்டேன். அதேபோலவே இந்த பாடல் அமைந்து விட்டது. இந்த பாடலை கேட்டதும் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் சந்தோஷப்பட்டாலும், இந்தபாடலுக்கு சிம்புவுடன் ஆடனுமான்னு கொஞ்சம் பயந்தாங்க.

 

என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட். இந்தப்படம் அரசியல் படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன். அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும். பரிசோதனை முயற்சியான இதுபோன்ற திரைக்கதையில நடிக்க சிம்பு ஒத்துக்கிட்டது பெரிய விஷயம். அவரோட ரசிகர்களுக்கும் இந்தப்படம் ரொம்ப புடிக்கும். கார் ஓட்டுற காட்சி ஒன்னை படமக்குறப்போ, நான் வேகமா ஓட்டுவேன், அதனால ஒன்ஸ்மோர் கேட்டுறாதீங்கன்னு சிம்பு சொன்னார். அந்த காட்சியை ஒரே டேக்ல படமாக்கினோம். இந்தப்படத்துல சிம்பு ஒரு காமன்மேனா நடிச்சிருக்காரு. அதனால அவருக்குன்னு புதுசா ஏதாவது பஞ்ச் டயலாக் எழுதுனா, இந்த கேரக்டர் இப்படி பேசுனா சரியா வருமான்னு பஞ்ச் பேச தயங்குவாரு, விண்ணை தாண்டி வருவாயா படத்துல கௌதம் மேனன் புது எஸ்டிஆரை காட்டிய மாதிரி நானும் இந்த மாநாடு படத்துல புது எஸ்டிஆரை காட்டணும்னு நினைச்சேன்.

 

சிம்பு-எஸ்ஜே சூர்யா இருவருக்குமான ஃபேஸ்ஆப் தான் படமே. எஸ்ஜே சூர்யா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் படத்தை கொண்டுபோய் சேர்க்கும். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் செகன்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வேலை பார்த்திருக்கார். ஒரு காட்சில கிட்டத்தட்ட நான்காயிரம் பேரை வச்சு 'மாநாடு' மாதிரி ஒரு காட்சியை படமக்குனோம். இந்த காட்சியோட பிரமாண்டத்தை தியேட்டர் ஸ்கிரீன்ல பார்த்தா தான் நல்லா இருக்கும். சிம்புவே படத்தை பார்த்துட்டு படம் புரியுதுப்பா’ன்னு சொல்லிட்டாரு. அந்தவகையில் மாநாடு தியேட்டருக்கான படம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

‘14 ஆண்டுகளுக்குப் பிறகு...’ - விஜய்க்காக குவிந்த ரசிகர்கள்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay arrived in kerala for goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.