![varma](http://image.nakkheeran.in/cdn/farfuture/H-1MR0VgMuuyPqtmzu3LQ66vQpM_PnaebreXPsDfg7Q/1550600780/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202019-02-19%20at%206.05.04%20PM.jpeg)
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தை பாலா இயக்கினார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில் வர்மா படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் துருவ் நடிப்பில் படம் உருவாகி ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பட இயக்குனர் பாலா 'படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ்வுடைய எதிர்காலம் கருதி மேற்கொண்டு பேச விரும்பவில்லை' என இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்தார். இதையடுத்து அர்ஜுன் ரெட்டி தமிழ் படத்தை வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாகவும், நாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பின்னர் அக்டோபர் ஹிந்தி படத்தின் நாயகி 'பனிடா சந்து' படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்திற்கு 'ஆதித்ய வர்மா' என பெயரிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதில் நாயகியாக 'பனிடா சந்து' நடிக்கவுள்ளதாகவும், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.