தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் அர்ஜூன் ரெட்டி. இதனை தொடர்ந்து இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக்கானது. தமிழில் இந்த படம் இரண்டு முறை ரீமேக் செய்யப்பட்டது. அதில் இரண்டாவதாக, ஆதித்ய வர்மா என்ற தலைப்பில் உருவான படம்தான் திரையரங்கில் ரிலீஸானது.
முதன் முதலில் த்ருவ் விக்ரமை வைத்து பாலாதான் இயக்கினார். ஆனால், படம் வெளியாக வேண்டிய சமயத்தில் தயாரிப்பாளர் இந்த படம் வெளியாகபோவதில்லை என்று அறிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதன்பின் தான் அர்ஜூன் ரெட்டி படத்தில் பணிபுரிந்த துணை இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என இயக்கி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில், சிம்ப்லி சவுத் என்கிற ஓடிடி தளத்தில் வர்மா படம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.