தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நேற்று (17.06.2021) முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி, நீட் தேர்விலிருந்து விலக்கு, கருப்பு பூஞ்சை மருந்து, கரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
"நீட் தேர்வு
கல்விக் கோரிக்கை
திருக்குறள் தேசியநூல்
கலாசாரக் கோரிக்கை
தடுப்பூசி
உயிர்க் கோரிக்கை
வேளாண் சட்டங்கள்
உழவர் கோரிக்கை
ஜி. எஸ். டி
பொருளாதாரக் கோரிக்கை
முன்வைத்தமைக்கு நன்றி
முதலமைச்சர் அவர்களே!
கோரிக்கைகளை
நிறைவேற்றித் தந்து
பெருமைப் படுத்துங்கள்
பிரதமர் அவர்களே!" என கூறியுள்ளார்.