கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் கரோனா குறித்த விழிப்புணர்வு கவிதை ஒன்றைக் கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் வெளியிட்டார்.இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,விழிப்புணர்வையும் ஏற்படுத்திய நிலையில் இவர் தற்போது தனது திருமண மண்டபத்தைக் கரோனா சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
''கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன்.நாட்டின் நலமே நமது நலம்'' எனப் பதிவிட்டுள்ளார்.தமிழகத்தில் கரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மருத்துவமனைகளின் பற்றாக்குறையைப் போக்க அரசியல் பிரபலங்கள்,கமல்ஹாசன் உட்பட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடு,திருமண மண்டபங்கள்,கல்லூரி வளாகங்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.