Published on 12/10/2022 | Edited on 12/10/2022
ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வைரமுத்துவும் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை. தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?. அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக" என குறிப்பிட்டுள்ளார்.
எங்களை ஆண்ட
இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ
தங்கள் தாய் மொழியை
எங்கள் தலையில் திணித்ததில்லை
தமிழ்நாட்டைத்
தமிழர்கள் ஆளும்பொழுதே
இந்தியைத் திணிப்பது
என்ன நியாயம்?
அதிகாரமிக்கவர்களே
அன்போடு சொல்கிறேன்
புலியைத்
தொட்டாலும் தொடுக
மொழியைத்
தொடாது விடுக#HindiImposition— வைரமுத்து (@Vairamuthu) October 12, 2022