Skip to main content

தங்க ஐ போனை தொலைத்த பிரபல நடிகை

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Urvashi Rautela loses 24 carat gold iPhone during India vs Pakistan match

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், இந்தியாவின் 3வது லீக் போட்டி கடந்த 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்ட நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண பல்வேறு முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அதில் திரை பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலாவும் கலந்து கொண்டு போட்டியை ரசித்தார். 

 

அப்போட்டியின் போது தனது 24 காரட் தங்க ஐ போனை தொலைத்து விட்டதாக அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, போனைப் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

 

பாலிவுட் நடிகையான ஊர்வசி ராவ்டேலா, தமிழில் சரவணா ஸ்டோர் குழுமத்தை சேர்ந்த சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாடகர் பரிசளித்த தங்க கேக் - விமர்சனத்திற்கு உள்ளான லெஜண்ட் பட நடிகை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Urvashi Rautela cuts 24-carat gold cake with Honey Singh gets criticise

பாலிவுட்டில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரவுதெலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ படம் மூலம் அறிமுகமானார். தமிழ், இந்தியை தவிர்த்து தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஆல்பம் பாடல்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல ராப் பாடகர் ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்ற ஆல்பத்தில் நடித்து வருகிறார். 

அதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று (25.02.2024) தனது 30வது பிறந்தநாளை ஊர்வசி ரவுதெலா கொண்டாடிய நிலையில், பாடகர் ஹனி சிங் அவருக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை ஊர்வசி ரவுதெலா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.  

Next Story

ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகார்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Complaint against  Mitchell Marsh at Uttar Pradesh Police Station

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், முகமது சிராஜ் மைதானத்திலேயே அழுதார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று  மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இது தொடர்பாக ஆஸ்திரேலிய  மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்பவர், உலகக் கோப்பையை அவமதிக்கும் வகையில் மிட்செல் மார்ஷ் பதிவிட்ட புகைப்படம் 140 கோடி இந்திய மக்களை புண்படுத்தியுள்ளது. அதனால் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என்று அலிகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.