ரஷ்யா, உக்ரைன் மீது ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலை சமாளிக்க 18 முதல் 60 வயது உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக போர் செய்யலாம் என உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். இதை ஏற்று பலரும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் உக்ரைன் நடிகர் பாஷா லீ என்பவர் ராணுவத்தில் இணைந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிரியான சண்டையில் தனது நாட்டை காப்பாற்ற நடிகர் பாஷா லீ உயிர் தியாகம் செய்துள்ளார். கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் ரஷ்ய ராணுவத்தினரின் குண்டு வீச்சு தாக்குதலில் நடிகர் பாஷா லீ கொல்லப்பட்டுள்ளார். இவர் இறப்பதற்கு முந்தைய தனது சமூக வலைதள பக்கத்தில்" கடந்த 48 மணிநேரமாக ரஷிய ராணுவத்தை எதிர்த்து நமது வீரர்கள் போராடியதை கண் முன்னே பார்க்க முடிந்தது. உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம்" என பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே பாஷா லீ கொள்ளப்பட்டது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.