Skip to main content

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்?

Published on 20/07/2021 | Edited on 20/07/2021
bghrss

 

கரோனா இரண்டாம் அலை காரணாமாக தமிழகத்தில் மீண்டும் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் மீண்டும் மூடப்பட்டன. மறு உத்தரவு வரும்வரை தியேட்டர்களைத் திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிலீசுக்குத் தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதற்கிடையே விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘கடைசி விவசாயி’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய 5 படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன. 

 

bhfdnfdndf

 

இதில் தற்போது 'துக்ளக் தர்பார்' படம்  ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'துக்ளக் தர்பார்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதால் வரும் விநாயகர் சதுர்த்திக்கு இப்படம் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. சன் டிவி ஒளிபரப்புக்குப் பிறகு, அன்றைய தினமே நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இப்படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்