Skip to main content

சர்வதேச விருதுகளை வென்ற தொரட்டி !

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
thorati

 

என் காதல் புதிது, மறுமுனை ஆகிய படங்களை இயக்கிய மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தொரட்டி'. 1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது 'தொரட்டி' படம்.  இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

 

 

 

அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை, கருவறுக்கும் கோபத்தை என பல்வேறு உணர்ச்சிகளை இயல்பாகவும், உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை 'தொரட்டி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஶ்ரீதருக்கு அளித்துள்ளனர். செக்கோஸ்லோவேகியாவில் நடந்த 'PRAGUE' மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது 'தொரட்டி' படத்தின் கதாநாயகனான ஷமன் மித்ரூவுக்கு வழங்கபட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து திரைப்பட விழாக்களிலும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற, வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள உள்ள இப்படத்தினை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது. ஷமன் பிக்ச்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு இப்படத்தை தயாரித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்