
இசைஞானி இளையராஜா கடந்த ஆண்டு 35 நாட்களில் எதுவும் கலக்காத ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அவரது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனையொட்டி இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலாவதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு இளையராஜாவும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது வி.சி.க. தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இளையராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக வாழ்த்து தெரிவித்தார்.