
செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தொடர்பாக நிகழ்வு ஒன்று சென்னையில் நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். அப்போது வெற்றிமாறன் படக்குழுவினர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு அவர்களது பங்களிப்பு பற்றி பேசினார். அப்போது சூரி குறித்து பேசுகையில், “சூரியால் இப்போது எந்தவிதமான கதாபாத்திரமும் பண்ண முடியும். அந்தளவிற்கு வளர்ந்திருக்கிறார். கிராமத்து கதைக்கு சரியான உடல் அமைப்பு கொண்ட நடிகராக இருக்கிறார். எல்லாத்தையும் தாண்டி எவ்ளோ அடிச்சாலும் தாங்கக் கூடிய உடல் வலிமை அவரிடம் இருக்கிறது. உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையான மனிதர் அவர். ஒரு கதாபாத்திரத்துக்காக எந்த எல்லைக்கும் அவரை கொண்டுபோகலாம்” என்றார்.