Skip to main content

துணிந்த 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி... பணிந்த நடிகர் சங்கம்... மிரண்ட தெலுங்கு பட உலகம் !

Published on 16/04/2018 | Edited on 17/04/2018
sri reddy


தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என கூறி  திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. பின்னர் பிரபல தயரிப்பாளரின் மகன் உட்பட பல பிரபலங்கள் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, வாட்ஸாப் பதிவுகள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த 'ஸ்ரீலீக்ஸ்' விவகாரம் தெலுங்கு சினிமாவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஸ்ரீரெட்டிக்கு மகளிர் அமைப்புகளும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தெலுங்கானா அரசுக்கும், மத்திய செய்தி ஒளிபரப்பு துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், அவருக்கு நடிக்க வாய்ப்பு அளிக்காமல் தடுப்பதும் தனி மனிதனின் உரிமையை பறிப்பதாகும். இந்த விவகாரத்தில் நான்கு வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் திடீரென்று நீக்கியுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் சங்கத்தில் உள்ள 900 ஆயிரம் உறுப்பினர்களும் ஸ்ரீரெட்டியுடன் நடிக்கலாம் என்றும் நடிகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்றும், மேலும் இந்த குழுவில் 10 பேர் திரைத்துறையில் இருந்தும் மற்றவர்கள் வேறு துறையைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா தெரிவித்துள்ளார். இதனால் ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை..! படங்கள் உள்ளே

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
sri reddy

 

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 விழாவில் தன்னை பற்றி பேசியபோது சிரித்ததற்கு அவரை சமூகவலைத்தளத்தில் கண்டித்து "கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது" என்று கோபமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகை ஹேமா குறித்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே... "ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்" என்று விமர்சித்திருந்தார். 

 

 

 

 

sri reddy


இந்நிலையில் தற்போது ஹேமா மீது கோபமடைந்த ஸ்ரீரெட்டி...."ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்" என்று சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது தெலுங்கு பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.