
கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு நடிகர் சிரஞ்சீவி அடுத்தாதாக நடிக்கும் படம் 'சயீரா நரசிம்மரெட்டி'. உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஏற்கனவே இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது தமன்னாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் தொடங்கி, தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.