Skip to main content

“இறைவன் இதுவரை என் மகனுக்கு வரன் கொடுக்கவில்லை” -சிம்பு திருமணம் குறித்து மனம் திறந்த டி.ஆர்.

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

t rajendar

 

 

அண்மையில் தமிழ் சினிமா துறையில் பெரும் பிரச்சனையாக இருந்து வந்த வி.பி.எஃப். கட்டணத்திற்கு தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது.

 

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் டி. ராஜேந்தர் இதுகுறித்தும், சங்கத்தில் முன்பு நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசி வந்தார்.

 

இதனையடுத்து நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர். “நானும் பல வரன்களை தேடி வருகிறேன். இறைவன் இதுவரை என் மகனுக்கு வரன் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு ‘ஈஸ்வரன்’ என்னும் படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். அந்த படத்தின் தலைப்பிலேயே வரன் இருக்கிறது. அதன்படி 2021-ஆம் ஆண்டு ஒரு கலைமகள் எங்கள் வீட்டிற்கு வரனாக வருவாள்” என்று டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்