உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் 21 நாள் லாக்டவுன் நேரத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையைச் சீர்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி மக்கள் வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை. அதேபோல வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடன் வசூலிப்பை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதேபோல் மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணத்திற்கான விளக்கு குறித்து இயக்குனர் சுசீந்திரன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்... ''உயர் திரு. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் அவர்களுக்கு, பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணம் கட்ட இயலாமல் தவிக்கிறார்கள். எனவே தாங்கள் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு கல்வி கட்டணங்களை செலுத்த 3 மாதங்கள் கால அவகாசம் பெற்றோர்களுக்கு தர அனுமதி வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.