
சிங்கம் 3 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளிவந்த படம் தானா சேர்ந்த கூட்டம். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் தன் கேரியரில் இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா சிறப்பு பரிசாக சிகப்பு வண்ண டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதனுடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் தான் நடித்த சிங்கம் 3 படம் வெற்றிபெற்றபோது இதே போல் கார் ஒன்றை இயக்குனர் ஹரிக்கு பரிசாக வழங்கினார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.