Skip to main content

“செல்வாவிடம் கேட்டது போல் வேறு எந்த இயக்குனரிடம் கேட்டதில்லை”- நினைவுகளை பகிர்ந்த சூர்யா

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவனும், யுவனும் இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிய, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஃபிப்ரவரி மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தண்டல்காரன் என்றொரு பாடலும் வெளியானது.இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி எப்போது வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்தியது படக்குழு. நேற்று இரவு 7:30 மணிக்கு யூ-ட்யூபில் வெளியான ட்ரைலர் வெளியானது. 
 

surya with selva


இந்த நிகழ்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங் தவிர மற்ற படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது சூர்யா செல்வராகவனை எப்போது முதன் முறையாக சந்தித்தேன் என்று தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். 
 

“2002ஆம் ஆண்டு பொது இடத்தில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போது எங்களுக்குள் சின்ன உரையாடல் நடந்தது. அதன் பின், 'காதல் கொண்டேன்' பாடல்கள் கட் பண்ணிட்டேன் பார்க்கிறீர்களா என்று போன்கால் செல்வாவிடம் இருந்து வந்தது. அதற்கு முன்பு எந்தவொரு படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பார்த்ததே இல்லை. மணி சார் மெட்ராஸ் டாக்கீஸ் ஆஃபிஸ்  எதிரில் ஒரு சின்ன எடிட் ஷுட்டுக்கு போன நியாபகம் இருக்கிறது. பாடல்கள் பார்த்தேன். அப்போது 'உன்கூட எப்போதாவது ஒரு படம் பண்ணனும்யா' என்று கேட்டேன். அதே போல் இன்னொரு இயக்குநரிடம் எப்போது கேட்டேன் என்று ஞாபகமில்லை. 2002-ல் கேட்டது சுமார் 17 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடந்துள்ளது.
 

devarattam


செல்வா ஸ்டீபன்பர்க்குடன் பணிபுரியவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நினைவாகியுள்ளது. உண்மையில், அவர் காலம் தாண்டி யோசிப்பவர். நான் நடிக்கும் போதும், பேசும் போதும் அப்படித்தான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது தான் உண்டு. இதே போல் அவரைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பேன். அவருடைய கதைகள் மீதும், அவர் மீதும் அளவுகடந்த காதல், மரியாதை இருக்கிறது” என்று சூர்யா கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்