
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். முன்னதாக நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்த அவர் தற்போது தன் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசுகையில்...."என் பெற்றோரும், சகோதரரும் என் பாதுகாப்புக்காக அனைத்தும் செய்து இருந்தனர். என்றாலும், நான் 21 வயதிலேயே வெறுப்புகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் மனதளவில் நொறுங்கி விட்டேன். இருந்தும் என் பெற்றோர் விரும்பாத எதிர் திசையில் நான் சென்றேன். என்றாலும், என் வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது. நான் எது பற்றியும் குறை சொல்லவிரும்பவில்லை. அனைத்தும் ஏதாவது ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும். என் குழந்தைகள் யாரையும் ஏமாற்றக் கூடாது. திருடக்கூடாது. நல்லவர்கள் என்று பெயர் வாங்க வேண்டும் என விரும்புகிறேன். நான் எதிர்கொண்ட வெறுப்பை அவர்கள் சந்திக்கக்கூடாது" என்றார்.