Skip to main content

தனுஷுடன் நடிக்கும் லோகேஷ் பட ஹீரோ; வெளியான புதிய அப்டேட் 

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

sundeep kishan act with dhanush caption millar movie

 

செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திக் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.  'சத்யா ஜோதி ஃபிலிம்ஸ்' சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகவுள்ளது. அதன்படி மாநகரம் படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் கிஷான்  கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது விஜய் சேதுபதி, கெளதம் மேனனுடன் மைக்கல் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்