Published on 26/04/2025 | Edited on 26/04/2025

90களில் முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக வலம் வந்தவர் சுகன்யா. பின்பு குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடைசியாக கார்த்திக் நடித்த ‘தீ.இவன்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷி 75 ஆம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகன்யா கலந்து கொண்டு ரமணர் பாடல் பாடினார். அவர் மனம் உருகி பாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுகன்யா நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார். எஸ்.வி.சேகர் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான ‘கிருஷ்ண கிருஷ்ணா’ படத்தில் ‘தள்ளி வெச்சு’ பாடலை மனோ, ஸ்வர்ணலதா உள்ளிட்டோருடன் பாடியிருந்தார்.