2024 முடிந்து 2025 வரவுள்ள நிலையில் அதை வரவேற்க எல்லோரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு தமிழில் வெளியான படங்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்க தலைவர், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 241 படங்கள் ரிலீசாகி உள்ளன. 2024-ல் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தி கோட், இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய 4 படங்கள் தயாரிக்கப்பட்டன.
திரைக்கு வந்த 241 படங்களும், ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 18 படங்கள் மட்டுமே லாபம் பார்த்து, தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது. திரைக்கு வந்த 241 படங்களில் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதாவது 7 சதவீத படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. மீதி உள்ள 223 படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இந்த வருடம் ரூ.1,000 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.