Skip to main content

மாதவன் மேல் வழக்கு தொடர்ந்த பிரபல இசையமைப்பாளர் 

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
madhavan

 

இறுதிசுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து, விக்ரம் வேதா படம் மூலம் இரண்டாவது ரவுண்டில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் மாதவன் அடுத்ததாக இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அடங்கிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இந்நிலையில் பூ, களவாணி படங்களின் இசையமைப்பாளரும், கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.குமரன் இப்படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் படமாக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே எதிர்ப்பை மீறி படமாக்கும் பணிகளை மாதவன் தொடங்கியுள்ள நிலையில் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப போவதாக எஸ்.எஸ்.குமரன் தற்போது அறிவித்து உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது....

 

 

 

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன். ஆனால் சில சட்ட பிரச்சினைகளால் அது வெளியாகவில்லை. இதனால் எனக்கு பெரிய அளிவில் நஷ்டம் ஏற்பட்டது. எனது நிலையை மாதவனிடம் தெரிவித்தபிறகும் அவர் பிடிவாதமாக படத்தின் தொடக்க விழாவை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. எனது அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்க கூடாது. எனவே மாதவன் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்