
'சுச்சி லீக்ஸ்' போல் தெலுங்கில் ‘ஸ்ரீ லீக்ஸ்’ என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் அரைகுறையாக ஒருவரது முகம் வெளியாகி தெலுங்கு நடிகர்களை அதிர வைத்தது. மேலும் இதே போல் பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நாசம் செய்த பிரபலங்களின் பெயர்களையும் வெளியிடப்போவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி 'ஸ்ரீ லீக்ஸ்' வாயிலாக அறிவித்திருந்தார். பின்னர் சில நாட்களுக்கு முன் நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்கிய தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுகிறார் என்று ‘ஸ்ரீ லீக்ஸ்’ ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்கு சேகர் கம்முலு மறுப்பு தெரிவித்ததுடன் ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரித்தார். அதற்கு பதிலடியாக ஸ்ரீரெட்டி சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் அவரைப்பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று பதிலடி கொடுத்தார். தெலுங்கு பட உலகில் இந்த சலசலப்பு ஓய்வதற்குள் தற்போது புதிதாக இன்னொரு தெலுங்கு நடிகர் பற்றியும் சமூகவலைத்தளத்தில் பாலியல் புகார் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. அதில்..."அந்த நடிகர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். யாரையும் உணர்வுப்பூர்வமாக அணுகி சிக்க வைப்பார். மக்கள் முன் நாடகமாட தெரிந்தவர். மற்ற கதாநாயகர்கள் மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரிடம் இருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தவறான நடத்தைகள் உள்ளவர். பல பெண்களை படுக்கையில் பயன்படுத்தி உள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவால் தெலுங்கு பட உலகில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு இதில் குற்றம் சாட்டப்பட்டவர் யார் என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.