Skip to main content

'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி வெளியிட்ட மற்றுமொரு பிரபலத்தின் சீக்ரெட் 

Published on 08/05/2018 | Edited on 09/05/2018
nani

 

 


சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய அவர் தெலுங்கு நடிகை ஜீவிதா மீதும் பாலியல் புகார் கூறினார்.


இந்த ஸ்ரீலீக்ஸ் பிரச்சனையால் தெலுங்கு படவுலகில் சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து படிப்படியாக சில காலம் ஓய்ந்திருந்த இந்த பிரச்சனை தற்போது மீண்டும் எழுந்துள்ளது. நடிகர் நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறி தெலுங்கு பட உலகில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் நானி தமிழில் நடிகை சமந்தாவுடன் 'நான் ஈ' மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெப்பம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்