![sr prabhakaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/KQSws1o7D7TlkKkHXIYPWUc_J7Zf-_3t2ffo9iTagJw/1602312645/sites/default/files/inline-images/sr-prabhakaran_0.jpg)
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதனை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயராக உள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த பிரபாகரன். தற்போது அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நேற்று இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்துமே ஒரு சேர பார்க்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி, சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் உள்ளிட்ட பலர் தான்யா ரவிசந்திரன் உடன் நடித்து வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளராக கணேஷ் சந்தானம், கலை இயக்குநராக மைக்கேல் ராஜ், எடிட்டராக டான் பாஸ்கோ ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளன.