'ஸ்க்விட் கேம்', கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கொரியன் வெப் சீரிஸ். சர்வைவல், த்ரில்லர், ஹாரர், ஆக்ஷன் என அனைத்து ஜானரும் கலந்து வெளியான இந்த வெப் சீரிஸின் முதல் சீசன் உலக அளவில் கவனம் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட வெப் சீரிஸ்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்த சீரிஸ் என்ற பெயரையும் 'ஸ்க்விட் கேம்' பெற்றது.
இதனிடையே இந்த சீரிஸ் கிட்டத்தட்ட 94 நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகவும், 142 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களையும் ஈர்த்தது. மேலும் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் மணி நேர பார்வை நேரத்தைக் கடந்து அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் என்ற பெருமையையும் பெற்றது. ஒன்பது எபிசோட் கொண்ட 'ஸ்க்விட் கேம்' முதல் சீசனில் லீ ஜங் ஜே, பார்க் ஹே-சூ, வை ஹா ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'சைரன் பிக்சர்ஸ்' தயாரித்திருந்த இந்த சீரிஸை ஹ்வாங் டோங் ஹ்யுக் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் 'ஸ்க்விட் கேம்' சீரிஸின் இரண்டாம் சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சீரிஸின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹ்வாங் டோங் ஹ்யுக், ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " 'ஸ்க்விட் கேம்' முதல் சீசனை கொண்டுவர 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் வெறும் 12 நாட்களில் மிகவும் பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் தொடராக 'ஸ்க்விட் கேம்' மாறியது. 'ஸ்க்விட் கேம்' சீரிஸை உலகம் முழுவதும் பார்த்து அன்பை பகிர்ந்த ரசிகர்களுக்கு இந்த சீரிஸின் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்று முறையில் நான் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் " என குறிப்பிட்டு சீசன் 2 வருகிறது என கூறியுள்ளார்.
Red light… GREENLIGHT!
Squid Game is officially coming back for Season 2! pic.twitter.com/4usO2Zld39— Netflix (@netflix) June 12, 2022