தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் நடிகர் சூரி, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதற்கிடையே பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துவரும் அவர், தற்போது பிக்பாஸ் முகேன் நடிக்கும் “வேலன்” படத்தில் மலையாளியாக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக சரளமாக மலையாளம் பேச கற்றுவருகிறார் சூரி. இப்படத்தில் நடிகர் மம்மூட்டியின் தீவிர ரசிகராக ‘மம்முக்கா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஸ்கை ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாவின் உதவியாளர் கவின் இயக்குகிறார். இளைய திலகம் பிரபு, தம்பி ராமையா, சூரி, ஹரீஷ் பேரடி, ஶ்ரீ ரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.