![surkv](http://image.nakkheeran.in/cdn/farfuture/LJY863CV4xk2NXGPEEXiSELdbbtVRtXX448eyOnHTSE/1533347678/sites/default/files/inline-images/sk.jpg)
பொங்கலுக்கு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா அடுத்தாக கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கலை இயக்குனராக கிரண் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'கனா கண்டேன்' படம் முதல் சமீபத்தில் வந்த 'கவண்' படம் வரை இயக்குனர் கே.வி.ஆனந்த் எழுத்தாளர் சுபாவுடன் கூட்டணி அமைத்து தன் படங்களுக்கு வசனங்கள் எழுதி வந்தார். தற்போது மாறாக தான் இயக்கப்போகும் புதிய படத்தில் பட்டுக்கோட்டை பிரபாகருடன், வசனத்தில் புதிய கூட்டணி அமைக்கவுள்ளார்.