![Sivakarthikeyan releases SJ Surya movie trailer](http://image.nakkheeran.in/cdn/farfuture/lgLAtfuuJfr-C42En0TGajyOikdZsu967fjz7LdOXts/1654002498/sites/default/files/inline-images/Untitled-12_8.jpg)
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், வெங்கட் ராகவன் இயக்கும் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மருது பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'பொம்மை' படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தின் ட்ரைலரை வெளியிடுவார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.