வேலைக்காரன் வெற்றிக்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். முன்னணி நடிகராக வலம் வரும் இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் விருது பெற்றபோது அந்த தருணத்தை பகிர்ந்துகொள்ள தன்னுடன் அப்பா இல்லை என வறுத்தப்பட்டு மேடையிலேயே கண் கலங்கினார். தந்தை மீது அதிகமாக பாசம் கொண்ட அவருடைய அப்பா சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். இந்நிலையில் விருது வாங்கிய தருணத்தை அப்படியே கண் முன் கொண்டு வரும் விதமாக சிவகார்த்திகேயனுடன் அவரது தந்தை நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில் மகனின் சினிமா விருது கேடயத்தை கையில் வைத்துக் கொண்டு தந்தை நிற்பது போலவும், உடன் இருக்கும் சிவகார்த்திகேயன் சிரித்த முகத்துடன் மைக்கில் பேசிக் கொண்டிருக்க்கும் போலவும் அந்த ஓவியம் உள்ளது. இதை கண்டு நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் அந்த ஓவியத்திற்கு பதில் டுவிட் போட்டார். அதில்...."உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை. அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது எனக்கு ஸ்பெஷலானது. நன்றியம்மா. 'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னே’ என்று பதிவிட்டுருந்தார்.