சிவகார்த்திகேயனின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவனின் நெறுங்கிய நண்பரான அனிருத்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இதன் மூலம் மூன்றாவது முறையாக இருவரும் ஒன்றாக இணைந்து பணி புரிகின்றனர்.
சிவகார்த்திகேயன் படத்திலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் எழுத்து வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு படத்திற்கு ஸ்கிர்ப்ட் என்பது பறவை மாதிரி தடையின்றி பறக்கவிட்டால் அது எந்த எல்லைக்கும் போகும். ஆனால், சில ஸ்கிரிப்ட்கள் பட்டாம்பூச்சி, டைனோசர் மாதிரி, அதனை பக்குவமாக அடக்கி முடிப்பது சிரமம் என்பதை உணர்கிறேன். அனைத்து படங்களுமே இயக்குநரின் மனதிற்கு நெருக்கமான படம் தான். ஆனால் இந்த படம் என்னுடைய மனதை திறந்து வைத்த படம்.
இந்த கதை எழுத பல இடங்களுக்கு பயணம் செய்தேன், புதுபுது அனுபவங்கள், வித்தியாசமான சிந்தனைகளும், எனது கற்பனையும் சேர்ந்து கதையாகியிருக்கிறது. இந்த பயணம் எனது வாழ்வில் நல்ல மறக்கமுடியாத நினைவுகளை கொடுத்திருக்கிறது. ஆனால், என்ன இதனை முடிக்க தான் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது. இருந்தாலும் பரவாயில்லை. எஸ்கே 17 இன் திரைக்கதை ரெடியாகிவிட்டது விரைவில் எனது டீமுடன் ஷூட்டிங் பணிகள் தொடங்குவோம்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் எனவும், 2020-ல் திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் பாண்டிராஜ், பி.எஸ். மித்ரன் ஆகியோரின் படங்களில் பிஸியாக இருக்கிறார்.