Skip to main content

விஜய்சேதுபதிக்காக சிம்பு பாடிய பாடல்! வைரலாக்கும் ரசிகர்கள்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021
bdfb

 

இயக்குனர் ஜனநாதனின் உதவியாளரும், அறிமுக இயக்குநருமான வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, வில்லனாக மகிழ் திருமேனி நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

 

இந்த நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி, 'முருகா' எனப் பெயரிடப்பட்டுள்ள பாடல், மார்ச் 19-ஆம் தேதி (நேற்று) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக விஜய் சேதுபதி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை வெளியான 'முருகா' பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்