Published on 01/10/2020 | Edited on 01/10/2020
தனுஷ், சிம்பு, விக்ரம் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் எஸ் கே கிருஷ்ணகாந்த் காலமானார்.
இவர் தனுஷ் நடிப்பில் திருடா திருடி, விக்ரம் நடிப்பில் கிங், சிம்பு நடிப்பில் மன்மதன் உள்ளிட்ட ஹிட் படங்களை தயாரித்தவர்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸில் மேனேஜராக பணிபுரிந்து பிறகு தயாரிப்பாளராக மாறியவர்.
கிருஷ்ணகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் மரணமடைந்தார். மறைந்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்திற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.