தேசிய ஊரடங்கு முடைவடைந்த பிறகும் ஷாப்பிங் மால்கல், தியேட்டர்கள், மல்டி ப்ளக்ஸ்கள் திறக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. இதனிடையே ரிலீஸுக்குத் தயாரக இருக்கும் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக அமிதாப் நடித்திருக்கும் ‘குலாபோ சதாபோ’, ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. மேலும் பல படங்கள் வெளியாக இருப்பதாகவும் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் இருந்து ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாகும் முதல் படமாக அனுஷ்காவின் 'நிசப்தம்' அமைந்துள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இதில் அனுஷ்காவுடன் மாதவனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள, இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்குத் தயாரக இருந்தது. கரோனா ஊரடங்கினால் இப்படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆந்திரா - தெலங்கானா திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.