Published on 26/08/2019 | Edited on 26/08/2019

சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை' வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. “சத்யா” படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் சார்பில் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார். படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.