
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல். தேசிய விருது, மாநில விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்று தனது குரலுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். திரைப்படங்களில் பாடுவதை தாண்டி இசை கச்சேரியையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிப்ரவரி 13 முதல் எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் குழவை தொடர்பு கொள்ள என்னால் முயன்ற அத்தை முயற்சியையும் மேற்கொண்டேன். ஆனால் முறையான பதில் கிடைக்கவில்லை. என்னால் லாகின் கூட செய்ய முடியாததால் என் கணக்கை டெலிட் கூட செய்ய முடியவில்லை.
தயவுசெய்து அந்த கணக்கில் இருக்கும் எந்த லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள். அதே போல் அதில் எழுதப்பட்ட எந்த செய்தியையும் நம்பாதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.