
சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டிக்கும், இந்தி பட உலகின் முன்னணி நடன இயக்குனரான சரோஜ்கானுக்கும் பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகரும் பா.ஜனதா கட்சி எம்.பியுமான சத்ருகன் சின்ஹாவும் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று கூறி பரபரப்பை உண்டாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது...."பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதும் அதற்கு சிலர் விரும்பி செல்வதும் காலம் காலமாக இருக்கிறது. எனக்கு நீ உதவினால் உனக்கு நான் உதவுவேன் என்பதுதான் அது. இதில் ஆத்திரப்படுவதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. படுக்கைக்கு அழைப்பது சம்பந்தமாக நடன இயக்குனர் சரோஜ்கான் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். பிரபல நடிகைகள் ரேகா, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தவர் அவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை நான் தெரிந்து வைத்து இருப்பதுபோல் அவரும் அறிந்து இருப்பார். ஒருவேளை சரோஜ்கான் கூட கஷ்டப்பட்டு இருக்கலாம். படுக்கைக்கு அழைப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. உண்மையை பேசிய சரோஜ்கானை யாரும் எதிர்க்க வேண்டாம். இந்த வழக்கத்தை உருவாக்கியவர்களை கண்டியுங்கள். படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை" என்று கூறியுள்ளார்.