உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.
தற்போது இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகர் ஷாரூக் கான், அவருக்குச் சொந்தமான நான்கு மாடி அலுவலகத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்குப் பயன்படும் வகையில் தற்காலிகமாக மும்பை அரசுக்குத் தந்திருக்கிறார்.
Making space for each other. #MeerFoundation has effectively transformed the 4-storey private office building, offered by @gaurikhan and @iamsrk, into quarantine quarters under @mybmc's guidance. In this fight, we stand together stronger than ever before. pic.twitter.com/HBjMBp1iDG
— Meer Foundation (@MeerFoundation) April 22, 2020
இந்த நான்கு மாடி அலுவலகம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எப்படி மாற்றப்பட்டுள்ளது என்ற வீடியோவை ஷாரூக்கானின் மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், மும்பை மாநகராட்சியின் அறிவுரை மற்றும் மீரா அறக்கட்டளையின் அறிவுரையையும் அனுகியபின், ஷாரூக்கான் மனைவிக்குச் சொந்தமான கௌரி டிசைன்ஸ் நிறுவனம் இந்த அலுவலகத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை குவாரண்டைன் செய்துகொள்ள மாற்றப்பட்டிருப்பதாக கௌரி தெரிவித்துள்ளார்.