பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அண்மையில் தமிழ்ப் பட இயக்குனரான வெற்றிமாறனை சந்தித்திருந்தார். இந்நிலையில் ஷாருக்கான் அசுரன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், அதை வெற்றிமாறனே ரீமேக் செய்ய இருப்பதாகவும் தகவல் பரவியது.
வடசென்னை படத்தை தொடர்ந்து உடனடியாக தனுஷை ஹீரோவாக வைத்து மீண்டும் இயக்கிய படம்தான் அசுரன். வெற்றிமாறனின் திரை பயணத்தில் ஷூட்டிங்கிற்கு சென்று எட்டு மாதங்களில் வெளியான படம் என்றால் அது அசுரன் படமாகதான் இருக்கும். மேலும் இந்த அசுரன் படம் பூமணி என்கிற நாவல் ஆசிரியர் எழுதிய வெக்கை என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு அமைந்த படம்.
இந்த படத்தை பார்த்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை பலரும் பாராட்டினார்கள். அதில் பாலிவுட் பாட்ஷா என்று சொல்லப்படும் ஷாருக்கானும் அடக்கம், அந்த படத்தை பார்த்து மிகவும் பிடித்துப்போய் வெற்றிமாறனை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். பின்னர், வெற்றிமாறனும் ஷாருக்கானும் மும்பையில் சந்தித்துள்ளனர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, வேறு படம் குறித்த எந்தவித விஷயங்களும் பேசவில்லை என்று இயக்குனர் வெற்றிமாறனே கூறியிருக்கிறார்.